Vision:
மொழித் திறனை வளர்ப்பது, இலக்கியத்தை அறிமுகப்படுத்துவது இலக்கியச் சுவையை உணர வைப்பது இலக்கியத்தின் வழியாக அறக்கருத்துக்களை மாணவர்களின் உள்ளத்தில் பதியச் செய்து மனித நேயம் மிக்க நற்குடிமக்களை நாட்டிற்கு அளிப்பது.
Mission:
இலக்கியத் தளங்களான சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, உரைநடை முதலியனவற்றின் வளர்ச்சி - போக்கு - மாற்றம் ஆகியவற்றை நோக்குதல்.
Objectives:
- மாணவர்களுக்கு 20 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட கவிதைகளையும் சிறுகதையும் அறிமுகப்படுத்துவதுடன், சமகால படைப்பாளிகளை மாணவர்கள் அறிந்து கொள்ள செய்வது.
- 1300 ஆண்டுகளுக்கு முன்பு மொழி அமைப்பு, கருத்துக்களை வெளிப்படுத்தும் முறையினை அறிந்து கொள்ள மாணவர்களுக்குப் பக்தி இலக்கியம் துணை புரிகின்றது. மேலை நாட்டில் தோன்றிய புதின வடிவம் தமிழில் செழித்து வளர்ந்திருப்பதை மாணவாகளுக்கு உணர்த்துவது.
- தமிழில் எழுதிய முதல் காப்பியம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. காப்பியங்களை அறிமுகப்படுத்துவது, காப்பிய கால மக்களின் வாழ்வினைப் பண்பாட்டினை உணரச் செய்வதுடன், நாடகத்தை மாணவர்களுக்கு உணர்த்துவது.
- தமிழர்களின் கருத்து வளத்தையும் மொழி பழமையையும் பண்பாட்டுச் சிறப்பினையும் அறிந்து கொள்ள ஏதுவாக சங்க இலக்கிய நூல் அனைத்தும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியை, இனத்தை, நாட்டை உணரும் வகையில் கட்டுரைகள் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.